கனடா பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி சமர்!

canada-parliament-Firedகனடா ஒட்டோவாவில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஒட்டாவா பாராளுமன்றத்தை ஒட்டியிருந்த நினைவிடம் ஒன்றில் காவலுக்கு நின்ற சிப்பாய் மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து பொலிசார் அவரை விரட்ட பாராளுமன்றக் கட்டிடத்துக்குள் நுழைந்துள்ளார். சிப்பாய்களாலும் பொலிசாரும் சூழ்ந்துகொள்ள பாராளுமன்றம் அடைக்கப்பட்டுள்ளது. கருப்பு உடையணிந்த ஒருவர் துப்பாக்கி ஏந்தி வந்ததைப் பார்த்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்.

வந்த துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக கட்டிடத்தை பொலிசார் தேடிவருகின்றனர்.

ஒட்டாவாவில், ஜன்னல்களை ஒட்டியும், மேற்கூரையிலும் நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கனடா தனது பாதுகாப்பை அதிகரித்து சில மணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வேளை பாராளுமன்றத்திற்க்குள் இருந்த பிரதமர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று கியுபெக் நகரில் அண்மையில் இஸ்லாத்துக்கு மாறியிருந்த நபரொருவர் கனடிய சிப்பாய்கள் இருவர் மீது காரைக் கொண்டுவந்து மோதி அதில் ஒருவரைக் கொன்றும் ஒருவரைக் காயப்படுத்தியும் இருந்தார். அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றிருந்தனர்.

Tags: , ,

Leave a Reply