ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஐ.தே.க தயாராகவே உள்ளது. ஏனெனில் அரசாங்கம் இதற்கு தயாரா என்று சவால் விடுத்த ஐ.தே.க உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, ஐ.தே.க. மீது பூசிய புலிச்சாயம் தற்போது அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அரசாங்கமே பிரித்தானிய தூதரகத்தை தீர்மானிக்கும் பணிகளை புலிகளுக்கு வழங்கியதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேர்தல் காலங்களில் ஐ.தே.க வின் மீது சுமத்தப்பட்டு வரும் போலியான குற்றச்சாட்டுக்கள் தற்போது பயனற்று போயுள்ளது. இதற்கு ஐ.தே.கவின் மீது பூசிவந்த புலிச்சாயம் தற்போது அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
ஐ.தே.க ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஆதரவு அளிக்க வேண்டிய தேவைப்பாடு ஐ.தே.கவிற்கு ஒருபோதும் கிடையாது.
தேசிய தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு பெரும் தடையாக இருந்தது விடுதலை புலிகள் இயக்கமாகும். அது மாத்திரமின்றி எமது பல சிரேஷ்ட தலைவர்களை கொன்று குவித்தது. விடுதலை புலிகள் இயக்கமாகும்.
எனவே, இதற்கு மாறாக அரசாங்கமே புலிகளுடன் அன்றிலிருந்து இன்று வரை ஒட்டி உறவாடி வருகின்றது. அரசாங்கம் மக்களின் முன்பு போலி நாடகமாடி ஐ.தே.க வின் மீதே புலிச்சாயம் பூசுகின்றது. இதற்கமைய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் பலர் தற்போது அரசாங்கத்திலேயே உள்ளனர். அவ்வாறாயின் ஐ.தே.கவின் மீது எவ்வாறு குற்றம் சுமத்தமுடியும்.
பிரித்தானிய தூதுவராயத்தை நிர்மாணிப்பதற்கான பணிகளை விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு வழங்கியது யார் என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது ஜீ.எல். பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் ஷேனுகா செனவிரத்னவின் மீது பாரத்தை சுமத்தியுள்ளது. ஏனெனில் ஷேனுகாவின் மீது தவறில்லை ஷேனுக்காவிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கமேயாகும்.
எனவே, அரசாங்கமே புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
எனவே, இது தொடர்பாக ஐ.தே.க இலங்கை சட்டதரணிகளுடன் ஆராய்ந்து வருகின்றது. இந்த தீர்ப்புக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய நாம் தயார் இதற்கு அரசு தயாரா என்று சவால் விடுத்தார்.
















