மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
கடகம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பு களை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். நன்மை கிட்டும் நாள்.
சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். பிரபலங்களின் ஆதரவுக் கிடைக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியா பாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
கன்னி: கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும் பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பு களையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத் துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோ ரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மகரம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
















