கள்ளக்காதலியுடன் கசமுசா.. மகள் பார்த்து விட்டதால் கொன்று ரயில் தண்டவாளத்தில் வீசிய தந்தை!

sexualகேரள மாநிலம் கோழிக்கோட்டில், தானும், தனது கள்ளக்காதலியும் சந்தோஷமாக இருந்ததை பார்த்து விட்ட 14 வயது மகளைக் கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிய தந்தையையும், அவரது கள்ளக்காதலியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோழிக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு சிறுமியின் உடல் கிடந்தது. உடல் முழுக்கக் காயம் இருந்தது. இதையடுத்து போலீஸார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையி்ல சிறுமியின் உடலில் விஷம் கலந்திருந்ததும், கடுமையாக தாக்கப்பட்ட தடங்களும் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை போலீஸாரால்.

இந்த நிலையி்ல கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் தனது 14 வயது மகளைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த சிறுமியின் உடலை அந்தப் பெண்ணிடம் காட்டினர்.

சிறுமியின் உடலைப் பார்த்த அப்பெண், இது எனது மகள்தான் என்று கூறிக் கதறி அழுதார். மேலும் தான் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து போலீஸாருக்கு அப்பெண்ணின் கணவர் மீது சந்தேகம் திரும்பியது. அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையைக் கக்கி விட்டார்.

சிறுமியின் தந்தைக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. ஒருமுறை இருவரும் உல்லாசமாக இருந்தபோது அதை இந்த சிறுமி நேரில் பார்த்து விட்டார். இதனால் தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரும், அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து சிறுமிக்கு விஷம் கொடுத்துள்ளனர். மேலும் அவர் இறந்ததும் உடலைத் தூக்கி தண்டவாளத்தில் போட்டு விட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இந்தக் கொடும் செயலுக்கு அச்சிறுமியின் அண்ணன் மற்றும் கள்ளக்காதலியின் மகனும் துணையாக இருந்துள்ளனர். தற்போது நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையி்ல அடைத்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply