பிரஜ்ஜில் பெண்ணின் மூளை, குடல்: ஒளித்துவைத்த பொலிஸ்!

fridgeபிரான்ஸில் குளிர்பானங்கள் வைக்கும் குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் சடல பாகங்களை பொலிசார் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த பெண் ஒருவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்பிக்கும் அவசரத்தில் பொலிசார், அதனை மேல் அலுவலகத்தில் சமர்பிக்காமல் தங்களது காவல் நிலையத்திலேயே பதுக்க வைத்துள்ளனர்.

அதிலும் தங்களிடம் உள்ள குளிப்பானங்கள் நிறைந்த குளிர்சாதன பெட்டியில் சடலத்தின் பாகங்களை வைத்து அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில் இவரது மேல் அதிகாரிகளுக்கு இறந்த அப்பெண்ணின் தகவல் ஒன்றும் கிடைக்காததால் காவல் நிலையத்தை சோதனையிட வந்துள்ளனர்.

அப்போது பெண்ணின் மூளை, குடல் வயிற்றின் ஓர் பகுதி உள்ளிட்ட பாகங்களை பொலிசார் பதுக்க வைத்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பொலிசாரின் செயலை வன்மையாக கண்டித்தது மட்டுமின்றி எச்சிரிக்கையும் விடுத்துள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply