வவுனியா அல்-இக்பால் வித்தியாலயத்தில் சித்திர பாட ஆசிரியர் இன்மையால் மாணவர்கள் பாதிப்பு!

Vavuniya_newsவவுனியா அல்-இக்பால் வித்தியாலயத்தில் சித்திர பாட ஆசிரியர் இன்மையால் மாணவர்கள் பாதிப்பு!

வவுனியா, சூடுவெந்தபுலவு அல்-இக்பால் வித்தியாலத்தில் சித்திர பாடத்திற்கான ஆசிரியர் கடந்த பல மாதங்காளாக நியமிக்கப்படாமையால் பரீட்சையை எதிர்நோக்கியுள்ள உயர்தர, சாதாரண தர மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இப் பாடசாலை முஸ்லிம் பாடசாலை. ஆனால் இங்கு தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப் பாடசாலையில் வேறு அழகியல் பாடங்கள் இல்லை. தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை சித்திரப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. சித்திரம் பாடத்தை உயர்தரத்தில் கற்று பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரி என ஏற்கனவே இப் பாடசாலையில் இருந்து மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். இந் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இப் பாடசாலையில் சித்திர பாட ஆசிரியர் இல்லை. இதன் காரணமாக டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக இப் பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. ஏற்கனவே இப் பாடசாலை மாகாண மட்டத்தில் உடற்கல்வியில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்டதில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்த நிலையில் முன்னர் கற்பித்த ஆசிரியர் இடம்மாறிய பின்னர் புதிய ஆசிரியர் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படாமையால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Tags: , ,

Leave a Reply