ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட தேனீர் விருந்துபசாரத்தில் ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி இந்த விருந்துபசாரத்தை பாராளுமன்ற வளாகத்தில் வழங்கியுள்ளார்.
எனினும், இந்த விருந்துபசாரத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் தேனீர் விருந்துபசாரரத்தில் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக்க கட்சி தேனீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்ன காரணத்திற்காக இவ்வாறு தேனீர் விருந்துபசாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் புறக்கணித்தன என்பது குறித்த காரணங்கள்n வெளியிடப்படவில்லை.
















