இலங்கை மீது சர்வதேச தடைகள் ; எச்சரிக்கிறார் தயான்

dayanபோர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம் என்று தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட ராஜதந்திரியான தயான் ஜயதிலக தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாட்டை விமர்சிக்கும் நீதித்துறை விவகாரம்.

எனினும் இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், குறித்த தடை நீக்கத்தை தவிர்த்திருக்க முடியும்.

ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அலட்சியமாக இருந்த காரணத்தினாலேயே ஐரோப்பிய நாடுகளும் அசட்டையாக இருந்தன.

அது விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்துக்கு வழியேற்படுத்தியது.

இன்னொரு புறத்தில் விடுதலைப் புலிகளுடனான பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய நாடுகள் கைவிட்டுள்ளன என்பதற்கான சமிக்ஞையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

2006ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டது.

அப்போதைய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் சிறப்பாக செயற்பட்டது. இன்னொரு புறத்தில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்திகா இந்த விடயத்தில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

ஆனாலும் இலங்கை அரசாங்கம் ராஜதந்திர விடயங்களில் அவரது பங்களிப்பை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி விட்டது.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்.

அந்த வகையில் இந்தத் தடை நீக்கத்தின் மூலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியாக பாரிய வெற்றியொன்றைப் பெற்றுள்ளது.

மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம் இலங்கைக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் இலங்கை மீது சில தடைகள் விதிக்கப்படலாம் என்றும் தயான் ஜயதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply