ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கும் படிவங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

cid-arristஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை கிளிநொச்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிய வருகின்றது.

சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்ற 06 பிள்ளைகளின் தந்தையே நேற்று சனிக்கிழமை மதியம் கிளிநொச்சி இரணைமா நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடையம் தெடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த குடும்பத்தாரின் உறவினர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த நபர் ஐ.நா விசாரனைக்கான படிவங்களை மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்த சமயமே நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவரை வவுனியாவுக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply