மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிபரானது எப்போது? திடுக்கிடும் தகவல்

manmohan-singh53-600பாகிஸ்தான் நாட்டு ஜனாதிபதி பங்கேற்க வேண்டிய ஒரு விழாவில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதாக தவறாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டதால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கும் கூட்டம் ஒன்று அக்டோபர் 28ஆம் தேதி நடக்க இருக்கின்றது. இந்த கூட்டத்திற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் கூட்டத்துக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னுன் உசேன் தலைமை தாங்குகிறார் என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் ஜனாதிபதி மன்மோகன் சிங் பங்கு கொள்கிறார் என தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தது.

கடைசி நேரத்தில் இந்த தவறு கடைசி கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்ட போதிலும், இந்த தவறு எப்படி நடந்தது என விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தவறு கண்டுபிடிக்கும் முன்பே சில அழைப்பிதழ்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply