குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2 சிறுமிகளை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர்!

நடப்பு ஆண்டு பருவமழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா, மராட்டியம், கர்நாடாகா ஆகிய மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை, போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றினார். சிறுமிகளை சுமந்தபடி , வெள்ளத்தை கடந்த அவருக்கு, பாராட்டு குவிந்து வருகின்றது.

இடுப்பளவு தண்ணீரில் இரண்டு சிறுமிகளைத் தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமுக வலைதளத்தில் பரவியதையடுத்து காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிறுமிகளைத் தோளில் சுமந்துகொண்டு சென்ற காவலர் பெயர் பிருத்விராஜ்சிங் ஜடேஜா என்பது தெரியவந்துள்ளது.

காவலர் இந்த செயலை அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி பாராட்டி இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “கடுமையான சூழல்களிலும் அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பிரித்வி ராஜ்சிங் ஜடேஜா ஒரு எடுத்துக்காட்டு. அவரது உறுதியைப் பாராட்டுங்கள்” என டுவீட் செய்துள்ளார்.

அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளைக் காவலர் ப்ரித்வி ராஜ்சிங் ஜடேஜா தோளில் சுமந்து சென்றுது எவ்வளவு நெகிழ்ச்சியான வீடியோ. அவரது அர்ப்பணிப்புக்கும், தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!