வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் பயணித்த வாகனம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

vau-ppls5இலங்கையில் பலவந்தப்படுத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோரை நினைவு கூரும் தேசிய தினத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் பயணித்த கயஸ் ரக வாகனம் இன்று அதிகாலை புத்தளம் காட்டுப்பிரதேசத்தில் வைத்து யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

காட்டுப்பகுதியிலிருந்து திடீரென பிரதான வீதிக்குள் பிரவேசித்த மதம் பிடித்த யானை ஒன்று முட்டி மோதியதில் கயஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

கொழும்பின் புறநகர்ப்பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போகச்செய்யப்பட்டோர் அடையாள நினைவுத்தூபிக்கு முன்பாக, ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்கப்படும் காணாமல் போகச்செய்யப்பட்டோரை நினைவு கூரும் தேசிய தினம் இந்த வருடம் இன்று (27.10.2014) அனுஸ்டிக்கப்படுகின்றது.

24வது வருடமாக அனுஸ்டிக்கப்படும் இந்த தேசியத்தினத்தில் சிறப்புப்பேச்சாளர்களாக ஊடகவியலாளர் விக்டர் ஐவன், நாடு தழுவிய மனித உரிமைச்செயல்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ, பாடகர் ஜயதிலக்க பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளைத்தேடி அலையும் குடும்பங்கள் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ வின் ஒழுங்கமைப்பில், காணாமல் போகச்செய்யப்பட்டோரை நினைவு கூரும் தேசிய தினம் இன்று (27.10.2014) அனுஸ்டிக்கப்படுகின்றது.
elefant-attack

Tags: ,

Leave a Reply