சென்னை தியேட்டரில் நடிகர் விஜய்க்கு சிலை. பொதுமக்கள் அதிருப்தி

vijay-silaiஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிரமாண்ட வெற்றி திரைப்படம் ‘கத்தி’. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் வசூலிலும் பெரும் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், விஜய்க்கு அவருடைய ரசிகர் ஒருவர் சுமார் ஒரு லட்சம் மதிப்பில் சிலை ஒன்றை நிறுவி, அதை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அந்த சிலையை வைக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று குரோம்பேட்டையில் உள்ள வெற்றி என்ற தியேட்டரில் விஜய் சிலையை வைத்து அதை விஜய் ரசிகர் கும்பிட்டார். பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அந்த சிலையை வணங்கி சென்றனர்.

இந்த சிலையை காணவும், இந்த சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கவும் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் வெற்றி தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் சிலை வைத்தது இல்லை. முதல்முறையாக விஜய்க்கு சிலை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை வைக்க விஜய்யிடம் ரசிகர் அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை.

விஜய்க்கு சிலை வைத்த நிகழ்ச்சியை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இதனால் கடும் அதிருப்தி கொண்டதாக செய்திகள் வெளிவருகின்றன. நடிகனுக்கு சிலை வைக்கும் கலாச்சாரம் இளைஞர்களின் வாழ்வை சீரழித்துவிடும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அளித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply