மேஷம்: கடந்த 2 நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட துவங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத் யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் துவங்குவதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்: எதையும் நம்பிக்கை யுடன் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைகட்டும். அரசால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறி வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவர். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப் பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவர். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப் படுவீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
மகரம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். ஒருவித படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத் யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.
















