பிரபல நடிகையை கற்பழிக்க முயன்ற தயாரிப்பு நிர்வாகி. படப்பிடிப்பில் பெரும் பதட்டம்.

riyakhan-bollywood-actressபிரபல பாலிவுட் நடிகை ரியாகானை தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கற்பழிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் பிரபல கதாநாயகர்களுடன் நடித்த நடிகை ரியாகான். இவர் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து விட்டு தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த தயாரிப்பு நிர்வாகி ஒருவர் நடிகை ரியாகானிடம் நட்புடன் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் நடிகை ரியாகானின் தனிமையை பயன்படுத்தி திடீரென அவரை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரியாகான், தயாரிப்பு நிர்வாகியை கீழே தள்ளிவிட்டு அறையை விட்டு ஓடி வந்து விட்டார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ரியாகான் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பு நிர்வாகி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், தயாரிப்பாளரே அந்த நபரை வேலையில் இருந்து தூக்கிவிட்டதால் இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை என்றும் ரியாகான் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply