எஸ்.எம்.எஸ். கொடுத்து வரவழைத்து நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட 15 வயது மாணவர்.

boy-gunஅமெரிக்காவில் 15 வயது பள்ளி மாணவர் ஒருவர் தனது சக நண்பர்களை எஸ்.எம்.எஸ் கொடுத்து ஒரு இடத்துக்கு வரவழைத்து சரமாரியாக அவர்களை சுட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள ஜெலன் ப்ரைபெர்க் என்ற 15 வயது மாணவர் சம்பவ தினத்தன்று தனது அறைக்கு ஐந்து நண்பர்களை எஸ்.எம்.எஸ் கொடுத்து வரவழைத்தார். பின்னர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஜெலன், திடீரென தனது துப்பாக்கியை எடுத்து நண்பர்களை சரமாரியாக சுட்டதுடன், கடைசியில் தானும் சுட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்டார். சுடப்பட்ட ஐந்து மாணவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். மூன்று மாணவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

ஜெலன் எதற்காக நண்பர்களை சுட்டு கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வாஷிங்டன் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சக மாணவர்களை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவனின் சமூக வலைத்தள பதிவுகள், செல்போன் உரையாடல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அண்மையில் அந்த மாணவனின் சமூக வலைத்தள பதிவுகளில், ‘இது நிலைக்காது…நிலைக்கவே நிலைக்காது, ‘நான் கவனித்திருக்க வேண்டும், ‘நீ எப்போதும் சரியாக இருந்தாய்’ போன்ற வாசகங்கள் இருந்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்

Tags: , ,

Leave a Reply