இது பாசத்துக்காக சேர்ந்த கூட்டம் இல்லப்பா…காசுக்காக சேர்ந்த கூட்டம் !!

jayalalithaஜெயலலிதாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எங்க அம்மாவ விட்டுருங்க என்ற அழுகுரல் சத்தமும், எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், கடையடைப்பு, மொட்டை என பின்னப் பெடலெடுத்தனர். ஆனால் இவை எல்லாம் பாசத்திற்காக சேர்ந்த கூட்டம் இல்லையாம்…காசு கொடுத்து சேர்க்கப்பட்ட கூட்டமாம். மொட்டை அடித்தல், பால் குடம் எடுத்தல், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவது, உண்ணாவிரதத்தில் பங்கேற்பது என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ரேட். மதுரையை பொறுத்த வரையில் மொட்டை அடிப்பதற்கு 500 முதல் 1000 ரூபாய் வரையிலும், பால்குடம் எடுத்து வருபவர்களுக்கு 1000 ரூபாயும், அலகு குத்தி கொள்பவர்களுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் ஹைலைட்டாக பெண்களுக்கு அழகான சேலைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது, கதறி அழும் பெண்களுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் வேறு. மேலும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டால் 300 ரூபாய், இரண்டு வேளை சாப்பாடு, மனித சங்கிலியில் கலந்து கொண்டவர்களுக்கு 100 ரூபாய் என மாவட்டம் வாரியாக காசை வாரி இறைத்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply