லைக்கா மோபைல் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா விடுதலைசெய்யப்பட்டுள்ளார் !

lyca_bossஇன்று காலை கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட லைக்கா தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் உபதலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் பல மணித்தியாலங்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (முன்னைய இணைப்பு) லைக்கா தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் கைது லைக்கா தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைவரும் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

அவருடன் இருந்த லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமியும் கைதுசெய்யப்பட்டுள்ளாா். விமானத்தில் பயணம் செய்த சக பிரயாணிகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மாலைதீவில் இருந்து பிரித்தானியா திரும்புகின்ற வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலைதீவிலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்பட்ட விமானம் கொழும்பில் தரித்து நின்றவேளையில் விமானத்தில் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எதற்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Tags: , , ,

Leave a Reply