விஜய், சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வரும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு சாதனைகள் போலவே சோதனைகளும் வந்துகொண்டிருக்கின்றன என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.
கத்தி படத்தில் இடம்பெற்ற 2ஜி குறித்த வசனம் காரணமாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் நேற்று கத்தி படத்தில் நடித்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடந்த ஒரு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக 26 வயது மனோஜ் குமார் என்பவர் நேற்று போலீஸார் கைது செய்தனர். இவர் கத்தி உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தனசேகரன், குமார் ஆகிய இரண்டு பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தண்டலம் அருகேயுள்ள ஒரு நிறுவன அதிகாரியை வழிப்பறி செய்து அவரிடம் இருந்து ரூ.5.9 லட்சம் கொள்ளை அடித்ததாக இவர்கள் மூவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
















