வங்கதேச பிரமுகருக்கு மரணதண்டனை. 40ஆண்டுகளாக நடந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வங்கதேச முக்கிய பிரமுகர் மதியூர் ரஹ்மான் நிஜாமிக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச தலைமை தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பை கேட்ட நிஜாமி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரியும்போது ஏற்பட்ட போரில் மனித உரிமைகளை மீறி ஏராளமான பொதுமக்கள் மரணம் அடைய காரணமாக இருந்ததாக ரஹ்மான் நிஜாமி மீது சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 40ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கில் அவர் மீது சாட்டப்பட்டிருந்த 16 குற்றங்களில் 8 குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை வழங்குவதாக, 3 நபர்கள் கொண்ட தலைமை தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது.

200 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பை நீதிபதி ஒருமணி நேரமாக நீதிமன்றத்தில் வாசித்தார். இந்த தீர்ப்பை கேட்ட நிஜாமி நீதிமன்ற வளாகத்திலேயே அதிர்ச்சி அடைந்து மயக்கமுற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிஜாமிக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து வங்கதேசத்தில் பதட்டம் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. பதட்டத்தை தணிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags: , ,

Leave a Reply