இலங்கையில் இந்திய மீனவா்களுக்கு துாக்கு தண்டனை தீா்ப்பு – அதிா்கின்றது இராமேஸ்வரம்

five-indian-fishermen-in-sri-lanka-courtsதங்கச்சிமடத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. இதனால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன

. ராமேஸ்வரத்தில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை செல்லக் கூடிய 4 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முற்று முழுதாக ராமேஸ்வரத்துக்கான போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது. 5 தமிழருக்கு தூக்கு: போர்க்களமாக ராமேஸ்வரம்! தண்டவாளம், பேருந்து தீவைப்பு! மின்சாரம் துண்டிப்பு! இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.ராமேஸ்வரம் அருகே பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் போதைப் பொருளை கடத்தியதாக 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இது தமிழகத்தில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் – மதுரை சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை – ராமேஸ்வரம் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் டயர்கள் கொளுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரயில் பாதைகளில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தால் சென்னை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களால் ராமேஸ்வரம் பகுதியே மிகுந்த கொந்தளிப்பாக பதற்றமாக காணப்படுகிறது. பேருந்துக்கு தீ வைப்பு இதனிடையே ராமேஸ்வரம் அருகே அக்காமடத்தில் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் முற்றாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 4 ரயில் சேவைகள் ரத்து இந்த போராட்டங்களால் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர் செல்லும் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை செல்லக் கூடிய 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டிருப்பதால் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடர்ந்து 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை விதித்துள்ளது- போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடர்ந்து 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை விதித்துள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம். ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இது தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மேலும் 3 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு- இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும்: மத்திய அரசு இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் இன்று கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்றார். இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம்- இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். 2011ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை அவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது அநீதியானது; கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் போதைப் பொருள் கடத்தினார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். 5 மீனவர்களையும் மீட்பதற்கு தேவையான உயர் சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்- கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதாக வெளியாகி இருக்கும் பேரதிர்ச்சியளிக்கிறது. அவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாடுவின் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் நெடுந்தீவு கடற்பரப்பில் போதைப் பொருள் கடத்தினர் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 3 ஆண்டுகாலம் அவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்தது.

இந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்கள், வேலை நிறுத்தங்களை தமிழக மீனவ உறவுகள் நடத்திப் பார்த்தும் மத்திய அரசு தலையிடவே இல்லை. இதன் விளைவாகத்தான் இன்று கொழும்பு உயர்நீதிமன்றம் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ளது கொடுமை அரங்கேறியுள்ளது. தூக்குத் தண்டனை என்ற முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது என்பது உலகில் எங்குமே நடந்திராக அநியாயத்தின் அக்கிரமத்தின் உச்சகட்டம்.

இந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் போனதன் விளைவுதான் இன்று எங்கள் மீனவர்கள் தூக்குக் கொட்டடியில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தூக்கு மர நிழலில் இருக்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் நலனுக்காக உரத்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் தூக்கு மேடையில் நிற்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிாதி ராஜபக்சவின் உருவ கொடும்பாவி எரிப்பு- தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஜனாதிாதி ராஜபக்சவின் உருவ கொடும்பாவியை கடலூர் உட்பட பல நகரங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை நீதிமன்றத்தில் 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றமும் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: , ,

Leave a Reply