முதலமைச்சரை பின்னி எடுத்த பெண்ணியலாளர்கள்

vikineswaran5அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தான் மேற்கோள் ஒன்றை காட்டி உரையாற்றியதால் தன்னை பெண்ணியலாளர்கள் பின்னி எடுத்து விட்டார்கள் என்று முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற உளநல தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

ஆணுக்கும் பொருந்தும் ஒரு கருத்தை பெண்ணை முன்வைத்துப் பேசியது எவ்வளவு தூரம் தவறு என்று கூறி என்னை அவர்கள் வைத போதுதான் எனக்கு புரிந்தது.

தான் வலியுறுத்த எடுத்த மேற்கோள் என்னை ஆபத்தில் மாட்டி விட்டது.மேற்கோள் மேற்கோளுடன் நிற்க வேண்டும். கூறிய கருத்தே முக்கியம்.மேற்கோளின் ஊடாக நான் கூறிய கருத்தை அடைந்து விட்டிர்களானால் கரடி துரத்தி வரக் கூரையில் ஏறிய பின் ஏணியைத் தட்டி விடுவது போல மேற்கோளைத் தட்டி விடுங்கள்.அது முக்கியமல்ல.தான் சொல்ல வந்த எனது கருத்து தான் முக்கியம் என்று கூற முடியாது தவித்திருந்த எனக்கு அதனைக் கூறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்கும் இன்றைய உளநல தின நிகழ்வில் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply