74 வயது மூதாட்டி மாணவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை!

sexual-abuse10xபேராதனை பொலிஸ் பிரிவில் 74 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கழுத்து நெரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது மாணவன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை கிரிபத்கும்புறைப் பகுதியிலுள்ள பலப்பிட்டிய என்ற இடத்திலேயே மேற்படி சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் மரணமடைந்துள்ள மூதாட்டி திருமணமாகாதவர் என்றும் பாலர் பாடசாலை நடத்தும் ஆசிரியை என்றும் தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக கண்டி சட்டவைத்திய அதிகாரி தெரிவித்ததை அடுத்தே பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபரான மாணவன் இன்று கைதாகி உள்ளான்.

பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ஆரியவன்ச தலைமையிலான பொலிஸ் குழவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply