வஞ்­சிக்­கப்­பட்ட வரவு செல­வுத்­திட்­ட­மா­கவே அடுத்த வரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்டம்

Mahinda-Budgetஇறுதி யுத்­தத்­தின்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்ட இலட்­சக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் பில்­லியன் கணக்­

கான சொத்­த­ழி­வு­க­ளுக்கும் ஐந்­தாண்­டுகள் கடந்தும் நஷ்ட ஈடுகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என்று குற்­றம்­சாட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் நீதியைக் கொன்று சமத்­து­வத்­துக்கு சவக்­குழி வெட்டி தனி மனித உரி­மைகள் சுய­கெ­ள­ரவம் ஆகி­ய­வற்றைப் புதைத்து இரா­ணுவ முற்­று­கைக்குள் வாழவே நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் எமது மக்கள் வஞ்­சிக்­கப்­பட்ட வரவு செல­வுத்­திட்­ட­மா­கவே அடுத்த வரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்டம் அமைந்­தி­ருக்­கி­றது என்றும் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை அமர்­வின்­போது இடம்­பெற்ற வரவு – செல­வுத்­திட்டம் மீதான நான்காம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்;

தமிழ் மக்­களின் மீது வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்­டி­ருந்த அர­சாங்கம் மிகப்­பெ­ரிய மனிதப் பேர­வ­லத்­து­ட­னேயே 2009ஆம் ஆண்டு யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தது. மனி­தத்­து­வத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலப்­ப­டு­கொ­லைகள் என்­ப­ன­வற்­றுடன் முடி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்கும் கொடிய யுத்­தத்தின் பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து எமது மக்கள் இன்­னுமே மீட்சி பெற்­றி­ருக்­க­வில்லை.

இன்­றைய நிலை­யிலும் எமது மக்கள் தமது சொந்தக் காணி­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலைமை காணப்­பட்­டு­வ­ரு­கி­றது. எமது மக்கள் இன்றும் அகதி முகாம்­க­ளிலும் தற்­கா­லிக கூடாரங்களிலும் வாழ்ந்து வரு­கின்­றனர். நெறி­த­வ­றிய இறுதி யுத்தம் எமது மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திய இழப்­புகள் அழி­வுகள்இ பாதிப்­புகள்இ வலிகள் அவ­லங்கள் தொடர்பில் அர­சாங்­கத்தின் பதில்­கள்தான் என்ன? எமது மக்­களின் பிரச்­சி­னை­களை எவ்­வாறு விளங்­கிக்­கொண்­டுள்­ளது.

நெஞ்சை அழுத்தும் அபத்­த­மான அரு­வ­றுப்­பான யுத்த சம்­ப­வங்­களின் எச்­சங்கள் சாட்­சி­யங்­க­ளா­கவும் துயரக் காட்­சி­க­ளா­கவும் காட்­சி­ய­ளிக்­கின்ற நிலையில் இழப்­ப­தற்கு இனியும் தம்­மிடம் எது­வு­மற்­ற­வர்­க­ளாக தமிழ் மக்கள் இருந்து வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர்.

இறுதி யுத்­தத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இலட்­சக்­க­ணக்­கான உயிர் இழப்­புக்கள் பில்­லியன் கணக்­கான சொத்­த­ழிப்­புக்கள் ஆகி­ய­வற்­றுக்கு யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கியும் நஷ்ட ஈடுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. எமது மக்கள் பல­வந்­த­மாக தமது வாழ்­வி­டங்­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளா­கவே வாழ்ந்து வரு­கின்­றனர்.

மீள்­கு­டி­யேற்றம் என்­றதன் பேரில் தற்­கா­லிக கொட்­ட­கைகள் தரப்பாள் குடில்கள் சகிதம் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டுள்ள கிரா­மங்கள் தற்­போது பெய்­து­வரும் மழையில் சேறும் சக­தி­யு­மாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.மேலும் மீள்­கு­டி­யேற்றம் என்ற பேரில் எமது மக்கள் மனித வாழ்க்­கைக்குப் பொருத்­த­மில்­லாத பகு­தி­க­ளிலும் காடு­களை அழித்து புதி­தாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட நிலப்­ப­ரப்­பு­க­ளிலும் வெட்­ட­வெ­ளி­க­ளிலும் மர­நிழல் பகு­தி­க­ளிலும் அழைத்துச் சென்று இறக்­கி­வி­டப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் தான் நீதியைக் கொன்று சமத்­து­வத்­துக்கு சவக்குழி வெட்டி தனிமனித உரிமைகள் சுயகெளரம் ஆகியவவற்றை புதைத்து இராணுவ அடக்கு முறைக்குள்ளும் இராணுவ முற்றுகைக்குள்ளும் வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்கள் தொடர்பில் இந்த வரவு செலவுத்திட்டம் இடியாகவே விழுந்துள்ளது. எமது மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகவும் இனக்குரோத வரவு செலவுத்திட்டமாகவும் அமைந்திருக்கிறது

Tags: , ,

Leave a Reply