புதுக்குடியிருப்பில் இராணுவ நெருக்கடிக்குள் மீண்டெழும் தமிழர் பாரம்பரியம்

puthu-siva5மாபெரும் முன்பள்ளி / அறநெறி பாடசாலை ஆசிரியர் திருவிழா 01.11.2014, சனிக்கிழமை வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக திரு ந. சிவசக்தி ஆனந்தன் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் பங்குபற்றினார்.

இந்நிகழ்விற்கான பேரணி கலாச்சார நடனங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் குதிரையாட்டம் முக்கிய இடம் பிடித்தது. கலாச்சார மேள தாள வாத்தியங்களுடன் ஆரம்பித்த நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன் அவர்களும், வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்களும் அழைத்துச் சென்றனர்.

இந் நிகழ்வில் திரு. சு. சேய்சோதி காந்தன் (கோட்ட கல்வி பணிப்பாளர், புதுக்குடியிருப்பு), திரு. வே. ஜெயம் சபாபதி (உதவி கல்வி பணிப்பாளர் முன்பள்ளி), திரு. அ. சுந்தரமூர்த்தி (உதவி கல்விப் பணிப்பாளர்), திரு. ச. நாகரட்டினம் (ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர்) திரு. பொ. பேரின்பநாயகம் (ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர்) ஆகியோர் முக்கியமாக கலந்து கொண்டனர். பெருந் திரளான மக்கள் வெள்ளத்தில் முன்பள்ளி ஆசிரியர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மேலும், கும்மி, கோலாட்டம், முன்பள்ளி சிறுவர் நடனம், முன்பள்ளி சிறுவர் பான்ட் வாத்திய அணிவகுப்பு ஆகியவையும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அரங்கம் நிறைந்த மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டனர். வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ந. சிவசக்தி ஆனந்தன் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) முன்பள்ளி ஆசிரியர்களின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார். முன்பள்ளி ஆசிரியர்களை முக்கியத்துவப்படுத்தி பேசிய அவர் ரூபா 500,000 (ஐந்து லட்சம் ரூபாய்) பணத்தினை வருகின்ற வருடம் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேசங்களின் முன்பள்ளிகளுக்கென ஒதுக்கீடு செய்வதாக ஏற்றுக் கொண்டார்.

இறுதியில், வன்னிக் குறோஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி சேவை சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வானது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இனிதே நிறைவு செய்யப்பட்டது.

Tags: , ,

Leave a Reply