மேஷம்
வருமானம் இருமடங்காகும் நாள். எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக இடமாற்றம், இலாகா மாற்றம் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும்.
ரிஷபம்
பல நாட்களாக மனதில் நினைத்த காரியம் செயலாகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பயணங்களால் விரும்பிய பலன் கிடைக்கும்.
மிதுனம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கடகம்
யோசித்தும், இறைவனை பூஜித்தும்வழிபட வேண்டிய நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பி எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பதும் நல்லது.
சிம்மம்
காலையில்கலகலப்பும், மாலையில் சலசலப்பும் காணப்படும் நாள். கல்யாண கனவுகள் நனவாவதற்கான அறிகுறி தோன்றும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம்.
கன்னி
சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறப்புகளைக் காண வேண்டிய நாள். சொந்த பந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
துலாம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்புகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
விருச்சகம்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொழில் தொடர்பாக புகழ்மிக்கவர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு. விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
தனுசு
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீங்கள் செய்த உதவிக்கு ஒருவர் பதில் உதவி செய்யலாம். சகோதர வழியில் சுபச் செய்தியன்று வந்து சேரலாம்.
மகரம்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். மனத்தளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். ஆன்மிகப் பற்று மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. திடீர் பயணமொன்று ஏற்படலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் கூடும்.
மீனம்
சேமிப்புகள் கரையும் நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். சிவ மைந்தன் வழிபாடு சிக்கல்களைப் போக்கும்.
















