விஜய்க்கு நோ சொன்ன பிரபல நிறுவனம், தனுஷுக்கு ஓகே சொன்னது ஏன்?

kakki-sattai-titleதனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காக்கி சட்டை’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுல் ஏற்கனவே கமல் நடித்த படம் ஒன்று வெளிவந்துள்ளதால் இந்த டைட்டிலுக்கு கமல் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸ் ஆகியவர்களுடன் தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவருமே தனுஷின் கோரிக்கையை ஏற்று ‘காக்கி சட்டை’ டைட்டிலுக்கு அனுமதி கொடுத்தனர். சத்யா மூவீஸ் நிறுவனர் ஆர்.எம்,.வீரப்பன் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் ரஜினியின் சிபாரிசின் பேரில் இந்த டைட்டிலை அவர் தனுஷுக்கு விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதே ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடித்த படம் ஒன்றுக்கு ‘காவல்காரன்’ என்ற பெயர் வைக்க அனுமதி கொடுக்க மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த படத்திற்கு காவலன்’ என்று வைக்கப்பட்டு ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் காக்கி சட்டை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதியா, பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர். பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் துரைசெந்தில்குமார். இவர் ஏற்கனவே எதிர்நீச்சல் படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Tags: , ,

Leave a Reply