பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஒருவர் மது அருந்தும் போட்டியில் கலந்து கொண்டு பரிதாபமாக பலியானார்.
பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சமீபத்தில் Clermont-Ferrand in central France என்ற பகுதியில் உள்ள பார் ஒன்றுக்கு சென்றார். அந்த பாரில் இதுவரை அதிகபட்சமாக 55 கிளாஸ் மது குடித்ததே ஒருவருடைய சாதனையாக இருந்ததை விளம்பரப்படுத்தியதை பார்த்து, அந்த சாதனையை இன்று தான் முறியடிக்கப்போவதாக கூறினார்.
அவர் ஒரே நிமிடத்தில் 30 கிளாஸ் மது குடித்தார். பின்னர் அவர் திடீரென மயங்கிவிழுந்துவிட்டார். உடனடியாக பார் ஊழியர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கோமா நிலைக்கு சென்று சிறிது நேரத்தில் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நடத்தபட்ட போலீஸ் விசாரணையில் பார் ஊழியர்கள் அவரை ஊக்குவித்து அதிகளவு மதுகுடிக்க உற்சாகப்படுத்தியதாக தெரியவந்தது. பார் மேனேஜர் உள்பட பார் ஊழியர்கள் ஐந்து பேர்களை கைது செய்து பிரெஞ்ச் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மரணம் அடைந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த பிரிவில் வழக்கு போடுவது என்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மரணம் அடைந்த 50 வயது நபருக்கு 21 வயதில் ஒரே ஒரு மகள் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
















