மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்

man-help5வட மாகாண சபை அனர்த்தப் பாதிப்புக்கு உதவுமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பதுளை கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 1500 பாதிக்கப்பட் மக்களுக்கான உடுபுடவைகள் வழங்கும் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர்களான திரு ந.பி.,ராஜ்குமார், திரு. ச.சபாநாயகம் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர், இவ் நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பொருட்டு மாவட்ட இளைஞர் கழகத்தின் சம்மேளன உப தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. ச.லக்சன் அவர்களிடம் உடுபுடவைகளை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் ஒப்படைத்தார். மேற்படி உடுபுடவைகள் நாளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply