காணாமல் போன கணவரை மீட்டுத் தருமாறு கோரிய சிங்களப் பெண்ணுக்கு துப்பாக்கிதாரிகள் அச்சுறுத்தல்

gunகாணாமல் போன கணவரை மீட்டுத் தருமாறு ஊடகங்களில் கோரி வரும் சிங்களப் பெண் ஒருவருக்கு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அனுராதபுரம் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான மயூரி இனோகா குமாரி ஜயசேன என்பவரே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு பிள்ளைகளுக்கு பால் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்த போது இனந்தெரியாத நபர்கள் என்னை துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி கடத்திச் சென்றனர் என மயூரி தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிக்குள் நுழைந்த வாட்டசாட்டமான நபர் ஒருவர் என் கைகளையும் கண்களையும் கட்டி கடுமையாக திட்டினார். என்னை மற்றுமொரு வாகனத்தில் ஏற்றி ஒன்றரை மணித்தியாலம் பயணித்தனர்.

கணவர் பற்றி பேசுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இனந்தெரியாத நபர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

“உனக்கு வாய் கூட, உயிருடன் வாழ வேண்டுமா இல்லையா என்பதனை தீர்மானித்துக் கொள் மேடைகளில் ஏறி பேசுவதன் மூலம் கணவரை மீட்க முடியாது.” என அவர்கள் எச்சரித்தனர்.

பின்னர் வாகனத்தை விட்டு இறக்கிவிட்டு சென்று விட்டனர். அச்சுறுத்திய நபர்கள் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்திக் ண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்னை பாலியல் தொழிலாளியா எனக் கேட்டு விசாரணை நடத்தினார். என்னை அகௌகரியத்தில் ஆழ்த்தம் வகையிலான கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார் என மயூரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மதுஸ்க ஹரிஸ் சில்வா என்ற தமது கணவரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை எனவும் அவரை மீட்டுத் தருமாறும் கோரியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply