கொஸ்லந்தை பெயரை விற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருகின்றது!– சிங்கள ஊடகம்

tnalogo2கொஸலந்தை மிரியாபெத்த மண்சரிவு அழிவைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகத் தெரிவித்து இவ்வாறு பாரியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதி திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இயங்கி வரும் அமைப்பு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பணம் அனுப்பி வைத்துள்ளது.

மிரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிக்க அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மிரியாபெத்த அனர்த்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பண்டாரவளைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவெனத் தெரிவித்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளார் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத் தரப்பில் சுமத்தப்பட்டு வரும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பதில்கள் எதனையும் அளிக்கவில்லை.

Tags: , ,

Leave a Reply