விமானத்தின் கழிவறையில் கசிவு. பயணிகள் உட்காரும் இடம் வரை கழிவுகள் வந்ததால் பரபரப்பு.

malaysia-airlinesஅமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னி சென்றுகொண்டிருந்த ஆஸ்திரேலிய நாட்டின் விர்ஜின் நிறுவன விமானத்தின் கழிவறையில் திடீரென கசிவு ஏற்பட்டதால் அந்த விமானம் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் கூறுகின்றன.

இது குறித்து விர்ஜின் விமான நிறுவனம் கூறிய விளக்கத்தின்படி ‘லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிட்னி சென்று கொண்டிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் சிங்க் பகுதியில் கசிவு ஏற்பட்டதால், அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால் அந்த விமானத்தின் கழிவறையில் கசிவு ஏற்பட்டு மனிதக்கழிவுகள் உள்பட சில கழிவுகள் பயணிகள் உட்கார்ந்திருக்கும் இடம் வரை வந்ததாகவும், இதனால் தாங்கமுடியாத நாற்றம் உண்டானதாகியதால் வேறு வழியின்றி விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அதில் பயணம் செய்த நியூசிலாந்து நாட்டு பயணி Julia Malley தனதுடுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு விர்ஜின் விமான நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ‘விமான கழிப்பறைகளுக்கு தனி வடிகால் அமைப்பு உள்ளது என்றும் இந்த பிரச்னைக்கு காரணம் சிங்க்கில் ஏற்பட்ட கசிவு என்றும், விமானத்தின் கழிவறையில் ஏற்பட்ட கசிவு விமானத்தின் உள்ளே வரவில்லை என்றும் கூறியுள்ளது.

Tags: , ,

Leave a Reply