குர் ஆனை எரித்ததாக வதந்தி. பாகிஸ்தான் கிறிஸ்துவ தம்பதி உயிரோடு எரித்து கொலை.

fireஇஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு கிறிஸ்துவ பாதிரியார் பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் அருகே உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ள கிராமம் சக். இங்குள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் 35 வயது சஹ்ஜாத் மசி,அவரது மனைவி ஷமி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தம்பதிகளுக்கும் செங்கல் சூளை முதலாளிக்கு திடீரென சண்டை வந்தது. இதனால் வேலையை விட்டு தாங்கள் செல்லபோவதக சஹ்ஜாத் மசி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிகள் இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்ததாக திடீரென அந்த பகுதியில் காட்டுத்தீ போல செய்திகள் பரவியது. செங்கல் சூளை முதலாளிதான் இந்த வதந்தியை பரப்பியதாக தெரிகிறது.

இந்த வதந்தியை உண்மை என நம்பிய அந்த பகுதி மக்கள் குர் ஆனை எரித்தவர்களை உயிரோடு விடமாட்டோம் என ஆவேசமாக கூறி தம்பதிகள் இருவரியும் எரியும் செங்கல் சூளையில் தூக்கி போட்டு கொலை செய்தனர். அந்த தம்பதிகள் செங்கல் சூளையில் கதறியப்ட் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின்போது அப்பகுதி போலீஸாரும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அந்த கிராமத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply