பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்ற தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இதன்போது அவர் உரையை ஆரம்பித்தபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார் அவருடைய சகோதரர் கோத்தாபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருக்கிறார்.
இந்தநிலையில் கோத்தாபாய நாடாளுமன்ற உறுப்பினராக உள்வாங்கப்படுவார் என்ற வதந்திகள் உலவுகின்றன.
அவ்வாறு அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதை கூட்டமைப்பு வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
















