யுத்தம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தியிருந்தால் ஐ.நா விசாரணை நடத்தியிருக்காது – சம்பந்தன்

sambanthan-talkயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்தியிருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்தியிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினரை இலங்கைக்குள் பிரவேசிக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் விசாரணைக் குழுவினரால் மெய்யான விபரங்களை அறிந்து கொள்வதில் சிக்கல் நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தம் தொடர்பிலான விடயங்கள் பற்றி தாம் கேள்வி எழுப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பிலேயே கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் இலங்கை அரசாங்கம் சுயாதீனமான முறையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய போதிலும், அரசியல்வாதிகளுக்கு எவ்வித அதிகாரங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும், மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply