தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக செயற்படுபவர்கள். பாரிய அழிவுகள் ஏற்பட்ட பின்பும் ஆளும் கட்சியில் இருக் கின்றோம் என்பதற்காக ஏனையோரில் குற்றம் காணுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. மலையகத்திற்கான எங்களுடையபயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கம் கொண்டதுமல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டு வரப்போவதுமில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்வேறுபட்ட கால கட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வடக்கு கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மலையக மக்கள் குடியேறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் அவர்களுடைய உறவுகளும் இருப்பார்கள் என்பதும்இ அவர்கள் தொடர்பாக அக்கறைப்பட வேண்டிய கடமைப்பாடு அம்மக்களால் தொிவு செய்யப்பட்ட எமக்கு இருக்கின்றது. சௌமியமூாத்தி தொண்டமான் மலைய தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கும் தலைவராக இருந்தார் என்பதையும் அவரது பேரனாக இருக்ககக் கூடிய செந்தில் தொண்டமான் தெரிந்து கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்சரிவு அனர்த்துக்கு உள்ளான பதுளை கொஸ்லந்தைக்கு பகுதிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட விஜயம் தொடர்பான விளக்கம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் வௌியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதுளை கொஸ்லந்தைக்கு விஜயம் செய்ததென்பதுஇ இயற்கை அனர்த்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டு தமது உறவுகள்இ உடமைகளை இழந்த மக்களுக்கு வட கிழக்கு தமிழ் மக்களின் அனுதாபங்களையும்இ அவர்களது துன்பங்களில் நாங்களும் பங்கெடுக்கின்றோம் என்பதையும் தொிவிப்பதே எமது நோக்கமாக இருந்தது.
பல்வேறுபட்ட கால கட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வந்து வடக்கு கிழக்கில் குடியேறிய பல்லாயிரக்கணக்கான மலையக மக்கள் கிளிநொச்சிஇ வவுனியாஇ முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களில் அவர்களுடைய உறவுகளும் இருப்பார்கள் என்பதும்இ அவர்கள் தொடர்பாக அக்கறைப்பட வேண்டிய கடமைப்பாடு அம்மக்களால் தொிவு செய்யப்பட்ட எமக்கு இருக்கின்றது என்பதையும் செந்தில் தொண்டமான் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2005 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அபாயங்கள் இருக்கின்றது என்பதை இலங்கை அரசாங்கம் தொிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரசே தொிவித்துள்ளது. அப்படி கூறப்பட்டிருப்பின் ஊவா மாகாண அமைச்சாராக இருக்கும் செந்தில் தொண்டமான் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கின்றீர்கள். பாரிய அழிவுகள் ஏற்பட்ட பின்பும் ஆளும் கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக ஏனையோரில் குற்றம் காணுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. அது மாத்திரமல்ல மலையகத்திற்கான எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கம் கொண்டதுமல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டு வரப்போவதுமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக செயற்படுபவர்கள். ஆகவே அடக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் இருந்தாலும்இ வேறு எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. ஆகவே அவ்வாறு பேசக் கூடாதென்று யாரும் எமக்கு தடையுத்தரவு போடமுடியாது. செந்தில் தொண்டமான் கண்டனம் தொிவிக்கும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் பிழையாக நடக்கவில்லை. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மலையக தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்கள் நிரந்தர குடிகளாக இருப்பதை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள்.
யுத்தத்தினால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதும், எமது மக்களின் காணிகளை இராணுவம் பறித்தெடுக்கின்றது என்பது உண்மை. ஆனால் அவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ள இறுதிவரை போராடுவோம் என்பதையும், மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால். அவர்களுக்கு வட கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதையும் மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.
தலைவர் சௌமியமூாத்தி தொண்டமான் மலைய தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர் தலைவராக இருந்தார் என்பதையும் அவரது பேரனாக இருக்ககக் கூடிய செந்தில் தொண்டமான் அவர்கள் தொிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், அவரது பாதையில் பயணிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம்.
















