இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ரணில்

tamil-news-ranilஇந்த அரசாங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமான இயங்க அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்ஸ அரசாங்கத்தை தோற்கடிப்பது என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடிப்பதாக அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க இரண்டு பிரதான கட்சிகள் ஆட்சி நடத்த வேண்டியது அவசியமாகின்றது எஉன அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சி இரண்டு தடவைகளுக்கு மேல் ஆட்சி செய்யக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதே வழமையான நடைமுறையாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும் அனைத்து தரப்பினரும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமாயின் ராஜபக்ஸ அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply