இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Keith-Harper2இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கும் தரப்பினரை மௌனப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை அடக்கி ஒடுக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான தாக்குதலுக்கு நிகரானது என்பதனை இலங்கை புரிந்து கொள்ள வேண்டுமென ஹார்பர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் கணக்கின் ஊடாக ஹார்பர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நெருக்கமானவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு பேலியான சாட்சியங்களை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply