பிரேசில் நாட்டு நபர் ஒருவரின் குடலில் சுமார் 125செமீ நீளமுள்ள உயிருடன் இருந்த மீன் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம்அகற்றி அந்நாட்டு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பிரேசில் நாட்டு நபர் ஒருவருக்கு சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது குடலில் பெரிய மீன் ஒன்று உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த மீனை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சையில்போது மீன் உயிருடன் வெளியே எடுத்தபோது அறுவை சிகிச்சை அறையில் இருந்த மருத்துவர்களும், நர்ஸ்களும் கைதட்டி சிரித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த ஒரு மருத்துவரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானதற்கு பிரேசில் நபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதியில்லாமல் தனக்கு நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையை எப்படி வீடியோ எடுக்கலாம் என அவர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
















