உலகின் அதிக சக்திவாய்ந்த நபர்களின் பட்டியல் ஒன்றை பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை சர்வே எடுத்து அதன் முடிவை நேற்று அறிவித்துள்ளது. இந்த முடிவின் படி ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட ஒரு படி முந்தி, முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
ஒபாமாவுக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் கைப்பற்றியுள்ளனர். பாரத பிரதமர் நரேந்திரமோடி இந்த பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 6வது இடத்தை பிடித்துள்ளார்.பிரபல அமெரிக்க தொழிலதிபர் வாரம் பெப்பெட் இந்த பட்டியலில்12அது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அவர்களுக்கு இந்த பட்டியலில் 10வது இடம் கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களுக்கு 22வது இடமும், தென்கொரிய அதிபர் கிம் ஜாங் அவர்களுக்கு 49 இடமும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு 36 வது இடமும், பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டல் அவர்களுக்கு 57 வது இடமும், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்யா நாடல்லா அவர்களுக்கு 64வது இடமும் கிடைத்துள்ளது.
2014ஆம் ஆண்டின் அதிக சக்தி வாய்ந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்த தலைவர்களின் பட்டியல்:
Vladimir Putin Russia
Barack Obama
Xi Jinping
Pope Francis
Angela Merkel
Janet Yellen
Bill Gates
Mario Draghi
Sergey Brin
Larry Page
David Cameron
Abdullah bin Abdul
Warren Buffett
Li Keqiang
Carlos Slim Helu & family
Narendra Modi
Jeff Bezos
Francois Hollande
Jamie Dimon
Ali Hoseini-Khamenei
Rex Tillerson
















