ஐக்கிய நாடுகள் சபையின் பக்கச் சார்பான விசாரணையினை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் மறுக்கப்பட மாட்டாது என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்தது.
இது ஒரு தரப்பினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















