ஜக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரகசிய தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மங்கள சமரவீர கடந்த காலங்களில் அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியாக செயற்பட்டுவருவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்பதாகவும் சவால் விடுத்தவருகின்றார்.
இந்த நிலையில் அவரை அரசாங்கத்தினுள் உள்ளிழுத்து முக்கிய அமைச்சுப் பதவியையும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுவரும் நிலையில் தாம் அரசாங்கத்தின் பக்கம் போகப்போவதில்லை என தனக்கு நெருக்கமான வட்டாரங்களுக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
















