வியட்நாம் நாட்டை சேர்ந்த Pham Van Thoai என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் ஷோரூமுக்கு சென்றார். $950 என விலை பேசி ஐபோன்6 ஒன்றினை வாங்கினார். ஆனால் அவருடைய ஐபோனுக்கு அடிஷனல் வாரண்டி கட்டணத்தை சேர்த்து $1500 என அவருக்கு பில் கொடுக்கப்பட்டது. அவர் பில்தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார்.
பின்னர் பில்தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தான் மாதம் $200 மட்டுமே சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர் அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு அழுது புலம்பினார்.
இந்த பரிதாப காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சிங்கப்பூரில் உள்ள indiegog.com என்ற இணையதளத்திற்கு அந்த வீடியோவை அனுப்பினார். அந்த இணையதளம் வீடியோவை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என கோரிக்ககை விடுத்தது.
என்ன ஆச்சர்யம். இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் $11,713 அளவுக்கு பணம் சேர்ந்துவிட்டது. அதற்குள் இந்த விஷயத்தில் போலீஸார் தலையிட்டு அவருக்கு $450 பணத்தை மட்டும் வாங்கித்தந்தனர். தனக்கு $1050 நஷ்டம் என அவர் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் indiegog.com நிர்வாகத்தினர் அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய $11,713 பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த விஷயத்தையும் கூறினர். இதனால் Pham Van Thoai இன்ப அதிர்ச்சி மூழ்கி தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரை சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
















