ஜனரஞ்சகமான ஆணாதிக்க மற்றும் தீண்டாமை சிந்தனைகள் – ஞானசக்தி ஸ்ரீதரன்

Ganasakthyவடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் வவுனியா வைபவமொன்றில் ஆற்றிய உரையில் இருந்து…

“அடுத்த வீட்டுக்காரன் அரவணைப்பிலுள்ள மனைவிபோல் இருக்காதீர்கள்” அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை“ நடமாடும் சேவைக்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம்” என்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடமாகாணசபையால் வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் உரையாற்றும் போதே இதனைத்தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில்

“அரசியல் எமது நிர்வாகத்தைச் சீரழிக்கின்றது. இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது. அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங்கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும், கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்டாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.

கணவர்களாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். எமக்கு எமது குழந்தைகளே முக்கியம். அவர்களுக்காக இந்தத்தரங்கெட்ட நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆனால் கவனிப்போடு செயலாற்றி வருவோம். நாட்கள் மாறும், சூழல்கள் மாறும் மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன”; என்றார். நன்றி-உதயன்-18-10-2014

மத்திய அரசை நம்பி வடக்கு மாகாண சபையை உதாசீனம் செய்யும் அரச அதிகாரிகள்??? என்று அவர் கருதுபவர்களையே இவ்வாறு குறிப்பிடுகிறார் என உணரமுடிகிறது.

பெண் நம்பிக்கைக்குரியவள் அல்ல. மனுசி அல்ல ..பேதை என்று பொருள் தொனிக்கிறது.

இலங்கையில் 3 தசாப்பதங்களுக்கு மேலாக நீதிபதியாக -உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவரின் பெண்கள் தொடர்பான மற்றும் சமூகப் பார்வை இப்படித்தான் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுக் கூட்டமொன்றில் இயக்கங்களைத் தனக்கு பிடிக்காது என்றாராம்.

இப்போது இயக்கங்கள் தொடர்பாகவும் ,பெண்கள் தொடர்பாகவும்; வெளியிட்டுள்ள கருத்துக்கள் தீண்டாமை -ஆணாதிக்க மனோபாவத்தில் சேருமதியானவை என்று இங்கு சொல்லத்தேவையில்லை.

மனித உரிமை ,ஜனநாயகம் ,பெண்கள், சிறுவர்களின் உரிமைகள,; சமூக விடுதலை இயக்கங்கள் பற்றி நீதித்துறைசார்ந்த உயர் பதவியிலிருந்த ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவற்றை கருத்தூன்றி கற்றிருக்கவேண்டும். இவை சம்பந்தமான கருத்தரங்குகளில் பங்கு பற்றியிருக்கவேண்டும்.

இது ஒரு முக்கியமான பிரச்சனை. அவரின் தனிப்பட்ட குண இயல்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை மாத்திரம் அல்ல.எமது நீதித்துறை ,சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுசேவை நிர்வாகத்துறை அரசியல் மற்றும் ஊடகம் சார்ந்தவர்களுக்கு எவ்வளவு தூரம் வெகுஜனங்களின் உரிமைகள் கற்பிக்கப்படுகிறது .சமூகத்தில் ஒரு பகுதியினரை காயப்படுத்தக் கூடியகருத்துக்கள் பற்றிய புரிதல் ஏற்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.

எமது கற்பித்தல் முறைகளில் அவை இருக்கின்றனவா?

ஆணாதிக்கம் தீண்டாமை இலங்கையின் பல்வேறு மட்டங்களில் நிலவுகிறது.

“தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும்”; என்பார்கள்.

ஆனால் இந்த பத்தாம் பசலித்தனங்களை மீறிய மனிதர்கள் இருக்கிறார்கள்;. இந்த மீறல்கள ஊடாகவே சமூகம் பின்தங்கியதிலிருந்து முன்னேறி வந்திருக்கிறது. பெண்களின் உரிமைகளும் அவ்வாறே நிலைநாட்டப்பட்டு வந்திருக்கின்றன.

இயக்கங்களின் எழுச்சிதான் 13 வதையும் நிலைநாட்டியது.

இந்தியா அல்லது ஐரோப்பிய வடஅமெரிக்க நாடொன்றில் இத்தகைய கருத்தை ஒரு அரசியல் தலைவர் வெளிப்படுத்தியிருந்தால் அது பாரதூரமான பிரச்சனையாகியிருக்கும்.

குடும்பத்தில் நிலவும் தவறான கண்ணோட்டங்கள் சமூகத்தில் பிரயோகிக்கப்படுகின்றன. அவை இயல்பாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இலங்கை பல்லினங்களின் நாடாக இருக்கும் நிலையில் ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற கோசம் சிறுபான்மை மக்களின் மீதான ஆணாதிக்க மனோபாவ வகையறாவைச் சார்ந்ததே.

இதே போல் தான் தமிழ் சமூகத்தில் கடந்து வந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செல்வாக்குச் செலுத்திய ஏக பிரதிநிதித்துவ அகங்காரமும். அது இன்றளவில் நிலவுகிறது. ஆனுவும் அந்த வகை சார்ந்ததே.

ஆணாதிக்க மனோபாவம் இங்கு வௌ;வேறு விதமாக மொழி பெயர்க்கப்படுகிறது.

3 ஆம் உலக நாடுகள் மீதான ஏகாதிபத்திய செயற்பாடுகளும் அவ்வகைப்பட்டவையே.

சமூகத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால் விசுவாசம் கற்பு பற்றிய ஆணாதிக்கமனோபாவம் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

தமிழில் இன்னுமொன்றுண்டு. “பிறர்மனை நயக்காப் பேராண்மை”

இந்த இரண்டு வாக்கியங்களிலுமே பெண் வலிமை குறைந்தவள் ,ஆளுமையற்றவள் ,பலவீனமானவள் நம்பிக்கைக்குரியவள் அல்ல் பேதை என்றாகிறது.

“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பார்கள்.இதுவும் ஆணாதிக்கவகைப்பட்டதே

ஆனால் வெகுஜனங்களில் ஆதிக்கம் வகிக்கும் படு பிற்போக்கான கருத்துக்களின் வழி இத்தவைர்கள்??? உருவாகிறார்கள். எமது சமூகத்தில் பெரும்படியாக நிலவுவது இந்த மனோபாவம்.

அதனால் தான் இங்கு எமது சமூகத்தில் இந்த வார்த்தைகளால் அதிர்ச்சி ஏற்படவில்லை போலும். இத்தகைய கருத்த்துக்களை சுய பிரக்ஞையின்றி வெளியிடுவோர் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் பற்றி என்ன மனேபாவத்தை கொண்டிருப்பார்கள் என்பதை நாம் இங்கு சொல்லத் தேவையில்லை.

தமிழ் மக்களுக்கும் இதர சமூகங்களுக்கும் ஆதிகாரப்பரவலாக்கல் நிகழுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதிகாரத்திலிருப்போரின் சமூகம் பற்றிய மனோபாவம் மாறவேண்டும.

அதிகார அகங்கார மனோபாவம் நீங்கவேண்டும்.
தம்மீதான சீர்திருத்தம் இங்கு அவசியப்படுகிறது.
இலங்கையில் தார்மிக் வலுக்களை உறுதி செய்யும் மனங்களைப் பண்படுத்தும் தொடர் ஜனநாயக மறுமலர்ச்சி இயக்கம் தேவைப்படுகிறது.

ஞானசக்தி – ஸ்ரீதரன்

Tags: , ,

Leave a Reply