பயந்து ஒதுங்குவது மீண்டும் பாய்வதற்கா? டுவிட்டரில் விஜய் அதிரடி பதில்!

vijay5கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இளையதளபதி விஜய் டுவிட்டரில் ரசிகர்களுடன் நேரடியாக சாட்டிங் செய்யவிருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்ததில் இருந்து டுவிட்டரே பரபரப்பான. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் விஜய் தனது ரசிகர்களுடன் டிவிட்டரில் கலந்துரையாடியுள்ளார். ரசிகர்கள் கேட்ட சுவாரஸ்ய கேள்விகளும் அதற்கு விஜய் அளித்த பதில்களும் இங்கே:

கேள்வி – அறிமுக இயக்குனர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பளிப்பதில்லை?

விஜய் பதில் – நான் நடித்த 58 படங்களில் 28 படங்கள் அறிமுக இயக்குனர்களின் படங்கள். ஓ.கே.வா அண்ணா!!

கேள்வி – தலைவா, நாம பயந்து ஒதுங்குகிறோமா இல்ல பாய பதுங்குறோமா?

விஜய் பதில் – பயமும் இல்லை பதுங்கவும் இல்லை, அனுபவம் தேடுகிறோம்.. அவ்ளோ தான்.

கேள்வி – அனிருத்துடன் பணியாற்றியது எப்படி இருந்தது?

விஜய் பதில் – அதீத எனர்ஜி கொண்ட இளம் மனிதர்.

கேள்வி – தற்போது உங்களிடம் பணம், புகழ் என அனைத்தும் உண்டு. அடுத்து என்ன?

விஜய் பதில் – நீங்கள் கொடுத்த அதீத அன்பை திருப்பிக்கொடுக்க வேண்டும். கொடுப்பேன்.

கேள்வி – உங்கள் படங்கள் ரிலீஸ் சமயத்தின் போது குறிவைத்து தாக்கப்படுவது பற்றி..

விஜய் பதில் – இது என்னை மட்டும் பாதிப்பதில்லை. என்னுடன் அப்படங்களில் பணியாற்றுபவர்களையும் சேர்த்து பாதிக்கும். அவர்களை நினைத்து தான் வருத்தப்படுவேன்.

கேள்வி – உங்கள் ரசிகர்களைப் பற்றி..

விஜய் பதில் – வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள்

கேள்வி – ரசிகர்களின் சண்டை இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. உங்கள் ரசிகர்களுக்கு தயவுசெய்து அட்வைஸ் செய்யுங்களேன்

விஜய் பதில் – இது பற்றி எனக்கு தெரியும். என் ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுப்படுவதை நிறுத்திவிட்டு சமூகம் மீது அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி – சமீபத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்கள்

விஜய் பதில் – ஜிகர்தண்டா, த்ரிஷ்யம் (மலையாளம்)

கேள்வி – ஏன் உங்களுக்கு அதிக ஹேட்டர்ஸ் உள்ளனர்

விஜய் பதில் – எதிரிகளையும் விரும்புங்கள். நான் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கேள்வி – முன்னர் நீங்கள் கோலா விளம்பரத்தில் தோன்றி நடித்தீர்கள். இப்போ அதற்கு எதிராக வசனம் பேசியுள்ளீர்கள்..

விஜய் பதில் – ஆம். இதற்குமுன் நான் அந்த விளம்பரத்தில் நடித்திருந்தேன். ஏன் சச்சின், ஆமிர்கான் போன்ற பிரபலங்களும் தான் அதில் நடித்திருந்தார்கள். என்னோட தவறுகளை திருத்திக்கொள்கிற சாதாரண மனுஷன்தான் நானும். இனி நான் அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்.

கேள்வி – உங்களுக்கு சூப்பர்ஸ்டார் டைட்டில் பிடித்திருக்கிறதா இல்லை இளையதளபதி டைட்டில் பிடித்திருக்கிறதா?

விஜய் பதில் – நான் என் கேரியரை தொடங்கும்போது மக்கள் என்னை ஏற்றுக்கொண்டாலே போதும் என்றிருந்தேன். இப்போது நீங்கள் நான் நினைத்ததை விட எனக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். உங்களோடு இந்த அன்புக்கு முன்னால் எந்த டைட்டிலும் பெருசாக தோணலை. என்றும் உங்கள் விஜய்.

கேள்வி – கத்தி ரிலீஸ் பிரச்னை பற்றிய உங்கள் கருத்து..

விஜய் பதில் – படம் வராதுன்னு சொன்னாங்க. தியேட்டர் ஜன்னல உடைச்சாங்க. 12 மணி வரைக்கும் டிக்கேட் கொடுக்கல. எண்ணி 12 வது நாள் 100 கோடினு சொன்னங்க.

இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் பிரபலங்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அது இங்கே:

இசையமைப்பாளர் அனிருத்தின் கேள்வி – ஹை அண்ணா உங்களை மிஸ் செய்கிறேன்.

விஜய் பதில் – நானும்தான்.

Tags: , ,

Leave a Reply