மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங் களின் நட்பு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர் ஒத்துழைப்பர். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
கடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். போராடி வெல்லும் நாள்.
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். புகழ், கவுரவம் கூடும் நாள்.
கன்னி: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சாதிக்கும் நாள்.
துலாம்: கடந்த 2 நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
விருச்சிகம்: சந்திராஷ்டமம் துவங்குவதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும்கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகை கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
மகரம்: இதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிக்கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கும்பம்: உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்
















