இங்கிலாந்து பெண் போட்டோகிராபர் எடுத்த புகைப்படத்தில் பேய். திடுக்கிடும் தகவல்.

england-photographer-ghostஇங்கிலாந்தில் உள்ள ஒரு பழமை மிகுந்த வீடு ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அகால மரணம் அடைந்த பெண் ஒருவரின் உருவம் போட்டோகிராபர் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1924 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தேம்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்ட ஒரு வீட்டில் பேய் நடமாடுவதாக கூறப்பட்டதை அடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய மைக்கல் மொரிஸ் என்னும் இளம்பெண் அந்த வீட்டின் உள்ளே மிகவும் தைரியமாக சென்று ஆய்வு செய்தார். அவர் நுழைந்தபோது அந்த பேய்வீட்டில் திடீர் திடீரென சிலபல சப்தங்கள் கேட்டதாகவும், வீட்டை புகைப்படம் எடுத்தபோது பேயின் உருவம் அந்த புகைப்படத்தில் பதிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீட்டில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முன் தான் மிகவும் நேசித்து வந்த குழந்தை தனது கவனக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அந்த பெண்தான் தற்போது பேயாக அந்த வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. புகைப்படத்தில் பதிவான பெண் அவராகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மைக்கல் மொரிஸ் தெரிவிக்கையில், ‘அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்து ஆய்வுகளில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்போது கிடைத்திருக்கும் புகைப்படம் அதனை இன்னும் பயனுள்ளதாக்கியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply