சமீபத்தில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் வதந்தி கிளம்பியது. இந்த வதந்தி உண்மையா? என்பது குறித்து அமலாபால் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் பள்ளிக்கூடம் சென்று பாடம் படிக்க விரும்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆம் மலையாளத்தில் தயாராகவுள்ள ஒரு படத்தில் அமலாபால் பள்ளி மாணவியாக நடிக்க முடிவு செய்திருக்கின்றார். இதற்கு கணவர் விஜய் அனுமதி கொடுத்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமலாபால் ஏற்கனவே மைனா படத்தில் பள்ளி மாணவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பள்ளி மாணவியாக நடிப்பது குறித்து அமலாபால் கூறியதாவது, “சினிமாவில் எனது பயணம் மைனா படத்தில் இருந்து அமைதியாக தொடங்கியது. அதில் பள்ளி மாணவியாக நடித்தேன். கடவுள் அருளால் மீண்டும் பள்ளி மாணவியாக நடிக்கவுள்ளேன். மலையாளத்தில் இப்படம் உருவாகிறது. மறுபடியும் இதுவொரு நல்ல அனுபவமாக அமைந்தது. உணர்வுகளின் வெளிப்பாடாக இந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது. இதை திரும்பிபார்க்கும்போது முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து நான் எனது பயணத்தை தொடங்குவதுபோல் இருக்கிறது. இது எனது கனவு படம்
















