பெண்ணை நிர்வாணப்படுத்தி கழுதை மேல் ஊர்வலம். நூதன தண்டனை கொடுத்த 39 கிராமவாசிகள் கைது.

woman-parade-naked-in-rajastanராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் பில்லி சூனியம் வைத்து ஒரு நபரை கொலை செய்துவிட்டார் என சந்தேகம் அடைந்து அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி கழுதை மேல் ஊர்வலம் செய்யும் கொடிய தண்டனையை பஞ்சாயத்து தலைவர் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமந்த் என்ற மாவட்டத்தில் துர்வல் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த, வர்திசிங் என்பவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார்.,

வர்திசிங்கை அவரது சித்திதான் பில்லி சூனியம் வைத்து கொன்றுவிட்டதாக அவரது மனைவி அடைந்து சித்தி மீது துர்வல் கிராம பஞ்சாயத்தில் புகார் செய்தார். இந்த புகாரை விசாரணை செய்ய கூடிய பஞ்சாயத்து வர்ஜித்சிங்கின் சித்தி குற்றவாளி என தீர்ப்பளித்து அவரை நிர்வாணப்படுத்தி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் செய்யும் தண்டனையை கொடுத்தது.

பஞ்சாயத்து தலைவர் உத்தரவுப்படி சிலர் கும்பலாக சென்று அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி ஒரு கழுதையில் ஏற்றி ஊர்வலம் வரச்செய்தனர். நூற்றுக்கணக்கான ஆண்கள் முன்னிலையில் நிர்வாணமான அந்த பெண் சுமார் 1 மணி நேரம் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 39 பேரைக் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப் பட்டவர்களில் 9 பேர் வர்திசிங்கின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply