போராட்டத்தில் புலிகள் சொல்ல வந்தது என்ன? வெளிவராதது..? வெளிவந்தது…

ltte_praba_pottuவிடுதலைப் புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப் பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன. அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனரென்றும் அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு நுணுக்கமான தகவலை கூற முயல்கிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருளென்பது முடிவு.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக் கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய மிகப் பெரும் கடமை ஒன்று அனைத்துத் தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மையின் உண்மை. போரியல் வரலாற்றில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் நிகழ்த்தப்பட்டன. ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக நிகழ்த்தப்படுகின்றன!

Tags: ,

Leave a Reply